உன்னை வலுப்படுத்த
தெரிந்தவர்களிடம் மட்டும
உங்கள் குறைகளை சொல்லுங்கள்
உன்னை பின்பற்றி
வருபவர்களிடம் மட்டும்
வழியை சொல்லுங்கள்
நேசிக்க தெரிந்தவர்களிடம் மட்டும்
அன்பை சொல்லுங்கள்
ஓடத்தெரிந்தவர்களிடம் மட்டும்
தூரத்தை சொல்லுங்கள்

உளி படாத கல்
சிலையாவதில்லை
வலியில்லாத வாழ்க்கை
வளமாவதில்லை

இன்பம்
துன்பம்
இரண்டும்
நிரந்தரமில்லா
நீர்குமிழிகளே

அன்பு காட்ட ஆயிரம்
பேர் இருந்தாலும்
புரிந்து கொள்ள
என்னவோ வெகு
சிலரே உள்ளனர்

சூரியன் தோன்றும் வரை
இரவு வீழ்ந்ததே இல்லை
உன் நாளும் வரும்

தோல்வியை மறக்காமல்
பயன்படுத்தும் அறிவு தான்
வெற்றிக்கு வழிகாட்டும்

எளிமையாக வாழ்பவன் தான்
வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்தவன்

வாழ்க்கை ஒரு கடிகாரம்
நேரம் செல்லும் வரை
அதின் மதிப்பு புரியாது

முடிவுகள் இல்லாமல் வாழ்ந்தால்
வாழ்க்கை ஒரு சுதந்திரப் பறவை

உங்களைத் தாக்கும்
எதிரிக்கு பயப்படாதீர்கள்
ஆனால் உங்களை
கட்டிப்பிடிக்கும் போலி
நண்பருக்கு பயப்படுங்கள்