நடுக்கத்தை விடுத்து
நடக்க தொடங்கினால்
வெற்றி உன் பின்னே ஓடும்
எத்தனை கைகள்
என்னை தள்ளிவிட்டாலும்
என் நம்பிக்கை
என்னை கை விடாது
தனது வலிமையை
உணராதவன் தான்
மற்றவரை நேசிக்க முடியாமல்
பொறாமை கொள்கிறான்
மருந்து போடுவார்கள் என்று
யாரை நினைக்கிறோமோ
அவர்கள்தான் புதிய
ரணங்களை உண்டாக்கி
விடுகிறார்கள்
மனதில் பட்டதை பேசுவது
திமிரு என்றால் அது
என்னிடம் கொஞ்சம்
அதிகமாகவே இருக்கு
ஒருவரின் பேச்சால்
அவர் உள்ளத்தை
அறிந்திட முடியாது
இனிக்க இனிக்க பேசுபவர்
நலன்விருப்பியுமல்ல
கடிந்துக்கொள்பவர் கேடு
நினைப்பவருமல்ல
வெற்றியை நோக்கி
செல்லும் பாதையில்
வெறுப்பும் விமர்சனமும்
கற்களாக வரும்
அதை கடந்து
செல்லும் காலடிகள்
வெற்றியின் சுடரை
எரியச் செய்கின்றன
பிரச்சினைகளை கண்டு பயந்து
பின் வாங்காதீர்கள்
காற்றை எதிர்த்தே
பட்டங்கள் மேலே
செல்கின்றன
தோல்வியிலும்
தொடர் முயற்சியை
மேற்கொள்பவர்களுக்கே
வெற்றி சாத்தியம்
மொபைல் திரையைத்
திறக்கும் முன்
உன் மனத்திரையில்
இன்றைய இலக்கை
வரைந்து கொள்
பிறர் செய்திகள்
உன் பாதையைத்
தீர்மானிக்க விடாதே
📖 பக்கம் 315 / 606
📋 Copied