உறவோ பொருளோ
ஆதியிலே இருக்கும் ஆர்வம்
இறுதி வரை இருப்பதில்லை

நம் அன்புக்குரியவர்களின்
சிறு மாற்றம் கூட
நம்மை அழ வைக்கும்

எதிர்பார்ப்புகள்
இல்லையென்றால்
ஏமாற்றங்கள் இல்லை
உண்மை தான்
அதேசமயம்
எதிர்பார்ப்புகள் நிறைந்தது
தானே மனித வாழ்க்கை

சோகமான தருணம்
மனதை உடைக்கலாம்
ஆனாலும் நம்பிக்கையை உருவாக்கும்

பிறரை குறைத்து நினைப்பது
உன்னை மட்டுமே தாழ்த்தும்

கோபத்திலோ வருத்ததிலோ
முகம் சுருங்கும் போது
அதை சுருங்க விடாமல்
சமாதானம் செய்யும்
உறவுகள் கிடைப்பதெல்லாம் வரம்

யாரிடம் சண்டை போட்டுவிட்டு
நம்மால் இயல்பாக இருக்க
முடியவில்லையோ அவர்களை
நாம் நேசிக்கிறோம்
அல்லது வெறுக்கிறோம்

கோபத்தில் முடிவெடுக்கதே
மகிழ்ச்சியில் வாக்கு கொடுக்கதே
இரண்டுமே ஆபத்தில் முடியும்

வலி கொடுக்காத
முதல் காதலும்
இறுதி காதலும்
தாய்க்கும் பிள்ளைக்கும்
இடையிலானது

துரதிர்ஷ்டம் என்ற வார்த்தை
முயற்சி செய்யாதவர்களுக்காக மட்டுமே