முதலில் என்னை நம்பினேன்
பிறகு உலகமே என்னை
விசுவாசிக்க ஆரம்பித்தது

உறக்கம் தொலைந்த
இரவுகளில்
உறங்கிய நினைவுகள்
விழித்துக்கொ(ல்)ள்கிறது

ஒரு தவறு நடந்தால்
பிழைகளை உங்களில்
இருந்து தேடுங்கள்
மற்றவர்களில் இருந்து
தேடாதீர்கள்

வாழ்க்கை எனும்
பந்தயத்தில்
கீழே விழும் போது
எழுந்து ஓடுவதற்கான
வழிகளை
நீங்கள் தேர்ந்தெடுக்கா விட்டால்
வலிகள் உங்களைத் தேர்ந்தெடுக்கும்

பொறாமை என்பது
உன்னில் இல்லாததை
உள்ளவரை வெறுப்பது

சில நினைவுகள்
மறக்க முயன்றாலும் மறையாது

ஒரு அடியிலே முடிவெடுப்பது எளிது
ஆனால் அந்த முடிவை
பின்பற்றுவது தான் துணிவு

சில உறவுகள் வாடகை
வீடு போன்றது எவ்வளவு தான்
நாம் அன்பு செலுத்தினாலும்
அவர்களுக்கு தற்காலிகமே

எந்த பெண்ணும்
அவள் கணவணுக்கு
ராணியாக
இல்லாமல் இருக்கலாம்
ஆனால் நிச்சயம்
அவள் தந்தைக்கு
இளவரசியாகவே இருக்கிறாள்

உன் மனதில்
உள்ள நம்பிக்கை
உன்னை எந்த சவாலையும்
எதிர்கொள்ள
வலிமை தரும்
நம்பிக்கை இல்லாத போது
வாழ்க்கை ஒரு இருட்டான
பாதையாக மாறும்