சோம்பேறிகளுக்கு
வெற்றியின் ருசி தெரியாது
முயற்சி செய்பவர்களுக்கு அது
தினசரி உணவாக மாறும்

நேரம் எல்லாவற்றையும்
மாற்றிவிடும்
நம்மை தவிர
நம் நினைவுகளை அல்ல

வலி இருந்தாலும்
அதை எதிர்கொண்டு
சிரிக்கத் தொடங்கும் தருணமே
வாழ்க்கையின் புதிய தொடக்கம்

மனது காயம் அடைந்தால்
வார்த்தைகளால்
ஆறுதல் கிடைப்பதில்லை

முன்னேற விரும்பினால்
முன்னேற்றம் செய்ய
தயாராக இரு

நாம் வாழ்வதற்கு பணம்
குறைவாகத்தான் தேவை
ஆனால் அடுத்தவர் போல
வாழத்தான் பணம்
அதிகம் தேவைப்படுகிறது

தனக்கான அனுபவம்
கிடைக்கும் வரை
யாருடைய அறிவுரையும்
எளிதில் ஏற்காது மனம்

அறிவுரையை அளவோடு
கொடுங்கள் ஏனெனில்
அவரவர் சூழ்நிலைகள் வேறு
அவரவர் பாதைகளும் வேறு

ஏமாளிகள் என்றுமே
நம்பிக்கைக்கு உரியவர்கள்

நல்லதை கூட
சில இடங்களில்
பேசாமல் இருப்பது
நல்லது