✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
வெளிச்சம் கிடைக்க
ரொம்ப தூரம்
செல்வது முக்கியமில்லை
ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றும்
துணிச்சல் போதும்
content_copy
வாழ்க்கை சில நேரம்
கடினமாக இருக்கும்
ஆனால் அதில்தான்
அர்த்தம் மறைந்து கிடக்கும்
content_copy
உங்களுக்கும்
சூழ்நிலைகள் மாறும்
என்பதை விட
சூழ்நிலைகள்
உங்களையும் மாற்றும்
என்பதே உண்மை
content_copy
வெற்றியாளர்கள்
தோல்வியை
எற்று கொண்டதில்லை
எற்றுக் கொள்பவர்கள்
வெல்வதில்லை
content_copy
கண்களை விட கண்ணீருக்கு
மதிப்பு அதிகம் ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும்
ஆனால் கண்ணீர்
உள்ளத்தை காட்டும்
content_copy
மரணத்திற்குப் பிறகும்
வாழ்க்கை உண்டா
என்று கேட்காதே
உயிருடன் இருக்கும்
போது நீ எப்படி
வாழ்ந்தாய் என்று பார்
content_copy
நிஜத்தில் நடக்க வேண்டும்
என்று நினைப்பதெல்லாம்
கனவில் நடக்கிறது
கனவில் கூட
நடக்கக் கூடாது
என்று நினைப்தெல்லாம்
நிஜத்தில் நடக்கிறது
content_copy
வாழ்க்கை
ஒரு தேர்வுக் கூடம்
தோல்வியும் வெற்றியும்
அனுபவம் தரும் பாடங்கள்
content_copy
துன்பம் வரும்போது
எல்லோரின் கண்கள்
அழுது காட்டும்
சிலரின் மனமே
மௌனமாக கதைக்கும்
content_copy
விதியே ஒருநாளாவது
என்னை நீ நிம்மதியாக
உறங்க வை அது
என் மரணமாக
இருந்தாலும் பரவாயில்லை
📖 பக்கம் 302 / 606
arrow_back
arrow_forward
📋 Copied