நிழலை
அழித்து
விடாதீர்கள்
நிஜங்கள்
மறையக்கூடும்
ஒருநாள் நிரந்தரமில்லாமல்

என் அன்பு
எல்லோருக்கும்
கிடைக்கும்
ஆனால் கோபம்
எனக்கு ரொம்ப
பிடித்தவர்களுக்கே
கிடைக்கும்

உழைப்பின் வியர்வை தான்
வெற்றியின் மணம்

சிறிய நிகழ்வுகளை
புரிய வைக்க
பெரிய அனுபவம் தேவைப்படும்

சில சோகங்கள்
பேச முடியாது
உணர முடியும் மட்டும்

நீ செய்கிற உழைப்பு
இன்று பேசவில்லை என்றாலும்
நாளை உலகம் பேசும்

உறவுகள்
தூக்கியெறிந்தால்
வருந்தாதே
வாழ்ந்துக்காட்டு
உன்னை தேடிவருமளவுக்கு

அன்பு வேண்டும் என்று
எவரிடமும் கெஞ்சாதீர்கள்
அது உண்மையாக இருந்தால்
நீங்கள் கையேந்த
வேண்டிய அவசியமில்லை

எண்ணங்கள் அழகானால்
வாழ்க்கையும் அழகாகும்

தட்டிகொடுக்க வருவார்கள்
என்று நினைத்திருந்த
வேளையிலே
தட்டிவிட்டு செல்பவர்களை
வசைபாட
வார்த்தையே இல்லை