எதிர்காலத்தை பற்றி
கவலைபடாதீர்கள்
எவ்வளவு கவலைபட்டாலும்
நடப்பது தானாக நடந்து
கொண்டு தான் இருக்கும்

சில கனவுகளை நிஜமாக
எண்ணி மகிழ்வதும்
பல நிஜங்களை கனவாக
எண்ணி மறப்பதும்
தான் வாழ்க்கை

நீ இழந்ததை நினைத்து
வருந்தினால் இருப்பதையும்
இழந்து விடுவாய் நீ
இருப்பதை நினைத்து
மகிழ்ந்தால் இழந்ததையும்
அடைந்து விடுவாய்

காயங்கள் உருவாக
கத்திகள் தேவை இல்லை
புரிதலற்ற
வார்த்தைகளே போதும்
வலிக்க வலிக்க
நின்று கொல்லும்

இனிமையான சொற்கள் எல்லாம்
உண்மையான வாழ்க்கையைத் தெரிவிக்காது

வாழ்க்கை ஒரு கண்ணாடி
நீ சிரித்தால் அது சிரிக்கும்

உன் வாழ்க்கைத் துணை வரும் வரை
உன் வாழ்க்கை முழுவதும்
துணையாக இருப்பவர்கள்
உன் நண்பர்கள் மட்டுமே

சில தவறுகளுக்கு
கோபப்படுவதை விட
கண்டுகொள்ளாமல்
கடந்து விடுவது நல்லது

அழகிய காட்சியை
தேடாதீர்கள்
காணும் காட்சியை
அழகாக்குங்கள்
வாழ்க்கை அழகாகும்

வெறுப்பால் நிரம்பிய மனதில்
எந்த வெற்றியும் அமைதியை தராது