முயற்சி எப்போதும் பேசாது
ஆனால் முடிவில்
அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்

வென்றால் மகிழ்ச்சி
தோற்றால் பயிற்சி
தொடரட்டும் முயற்சி

தனியே நின்றாலும்
தன் மானத்தோடு
சுமையான பயணமும்
சுகமாக
(நம்பிக்கை)

நடப்பதை
மாற்ற இயலாது
என்பது நம்பிக்கை
நடப்பதை சிந்தித்து
சிறப்பாக செய்வது
நம் திறமை

வலியை மறைக்க முயற்சிக்காதே
அது மனிதநேயத்தின் ஒரு அங்கம்

எந்த தவறை நீ எங்கே
பார்த்தாலும் அதை
உன்னிடம் திருத்திக்கொள்

எல்லாம் தெரியும் என்பவர்களை விட
என்னால் முடியும் என்று முயற்சிப்பவரே
வாழ்வில் ஜெயிக்கின்றார்

உன் கனவுகளுக்கு
உயிரூட்டி பார்
உன் கனவும்
உயிர் பெரும்

கடந்து போன நிமிடங்கள்
ஏனோ கலைக்க முடியாத
நினைவுகளை மட்டும்
விட்டு செல்கின்றன

ஒருவர்
நம் மீது வைத்த
நம்பிக்கையை
கடைசி வரை
காப்பாற்றுவதில்
தான் உண்மையான
மனிதத்துவம் உள்ளது