வாழ்க்கை கடினம் என்றால்
நீ வலிமையானவனாக
மாறி கொண்டிருக்கிறாய்
என்பதற்கான அறிகுறி

தன்னையும் பிறரையும் சரியாக
உணரும் திறன் படைத்தவர்கள்
தான் வாழ்க்கையில் மிகவும்
எளிதாக முன்னேற முடியும்

அடுத்தவர்களுக்கு கெடுதல்
நினைக்காத எல்லா
நேரமும் நல்ல நேரமே

அவரவர் இடத்தில் இருந்து பார்
அவர்களின் வலி புரியும்
தூரத்தில் இருந்து பார்த்தால்
எல்லாமே எளிது தான்

முகத்திற்கு முகமூடி
போடுபவர்களை விட
அகத்திற்கு முகமூடி
போடுபவர்கள் அதிகம்

நம்மிடம்
ஒன்றுமே இல்லாவிட்டாலும்
தர்மம் செய்ய
ஒன்றே ஒன்று
அளவற்றதாக உள்ளது
அது அன்பு

வலி இன்றி சிரிக்கும்
சிரிப்புக்கும்
விழியின்றி
சிரிக்கும் சிரிப்புக்கும்
ஆயிரம் அர்த்தம் உண்டு

அனைத்தையும்
இழந்தபோதும்
புன்னகை பூத்திருக்கு
மீள்வோமென்ற
நம்பிக்கையில்

வாழ்க்கை ஒரு கடல்
அலைகளை அஞ்சாத மனம் தான்
கரையை அடையும்

எல்லா சூழ்நிலைக்கும்
பொருந்தக்கூடிய ஒன்று
அமைதி 🧘‍♂️
எல்லா சூழ்நிலைக்கும்
பொருந்தாத ஒன்று
கோபம் 😤