சிறிய சிறிய முயற்சிகளே
பெரும் வெற்றிகளின் அடிப்படை

யாருக்காகவோ
காத்திருப்பதை விட
நமக்காக
காத்திருப்பவரின்
அன்பை
ஏற்றுக் கொள்ளலாம்

ஆயிரம் போராட்டங்களையும்
சவால்களையும் வென்றுவிடும்
மனமானது அன்பு என்ற
புள்ளியில் ஒருவரிடத்திலாவது
தோற்றுக் கொண்டே தான்
இருக்கிறது

தோல்வியைக் கடந்து செல்லும்
பாதையில் தான்
உண்மையான நம்மை காணலாம்

ஒவ்வொரு இறுதியும்
ஒரு புதிய ஆரம்பத்திற்கான அழைப்பு

நண்பர்கள் வாழ்வின் நிழல் அல்ல
அவர்கள் உங்கள் வாழ்வின்
ஒளியாக இருப்பார்கள்

யார் நினைவிலும்
இல்லை நாம்
என்பதை விட
யார் வலியிலும்
நாம் இல்லை
என்பதே
நிம்மதியான வாழ்க்கை

எதை காரணம் காட்டி
உங்களை நிராகரித்தார்களோ
அதை நிவர்த்தி செய்து
ஒரு நிமிடமாவது
அவர்கள் முன்
நிமிர்ந்து நின்று
கடந்து விடு

கடந்து போன நாட்களில்
உன் துன்பத்திற்கான காரணத்தை பட்டியலிடு
இனி கடக்கபோகும் நாட்களில்
அவை மீண்டும் நிகழாமல் தடுக்கலாம்

மறந்து விட்டேன்
நமக்கு நாமே
சொல்லிக்கொள்ளும்
சமாதானம்