வாழ்க்கை ஒரு நதி போல
தடைகள் இருந்தாலும் தன்
வழியைத் தேடிவிடும்

நம்மை நாம்
கேள்வி கேட்காதவரை
நம் தவறுகளை
நாம் உணரபோவதில்லை

வாழ்க்கை ஒரு காற்று போல
பிடிக்க முயன்றால் போய்விடும்
ரசித்தால் தங்கிவிடும்

பிறரை விட உயரம் பெற
முயற்சி செய் ஆனால்
அவர்களைக் குறைத்து அல்ல
உன்னை உயர்த்தி

பணமும் மகிழ்ச்சியும்
பரம எதிரிகள்
ஒன்றிருக்கும் இடத்தில்
மற்றொன்று இருப்பதில்லை

மனிதம் இருக்கு
என்று நம்புங்கள்
அதை மற்றவர்களிடம்
இருந்து மட்டும்
எதிர்பார்த்து விடாதீர்கள்

ஒவ்வொரு தோல்வியும்
ஓர் அடையாளமில்லா
வெற்றியின் ஆரம்பம்

நேரத்தை சேமிப்பது
எளிதாய் இருக்குமானால்
உனக்கு அழகான எதிர்காலம்
காத்துக் கொண்டிருக்கும்

அவமானங்கள் என்றும்
பிறரால் ஏற்படுவதில்லை
தமக்கு தம்மால் ஏற்படுத்தி
கொள்ளப்படுகிறது

துணிச்சல் இல்லாமல்
வெற்றியில்லை
நம்பிக்கை இல்லாமல்
வாழ்க்கை இல்லை