✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
உறுதியான இரும்பு கூட
தீயில் உருகும்
மனித மனம்
உறுதியான பிறகு
எதையும் விரும்பாது
எதற்கும் உருகாது
content_copy
தீயதை விட்டு
தூரத்தில் ஓடு
நல்லதை விடாமல்
துரத்தி ஓடு
content_copy
இன்று வரும்
துன்பங்களை கண்டு ஒழிந்தால்
நாளை வரும்
துன்பங்களை யார் வரவேற்பது
content_copy
பலவீனம் கூட பலமாகும்
கடிவாளம் அணிந்த
இலட்சிய பயணத்திற்கு
content_copy
வாழ்க்கை ஒரு ஓவியம்தான்
நிறம் சேர்க்கும் முறையை
நாம் தேர்வு செய்கிறோம்
இருண்ட வண்ணங்கள் கூட
அழகாக இணைந்தால்
ஓவியத்தில் பிரம்மாண்டம் உருவாகும்
content_copy
எடுத்து வைப்பது
சிறிய அடியாக
இருந்தாலும்
எட்டுவது சிகரமாக
இருக்க வேண்டும்
content_copy
இரவின் அழகை ரசிக்க
ஒளியின் அருமையை
உணர வேண்டும்
content_copy
காயப்படுவதற்குப் பழகுங்கள்
உங்களுக்காக நிறைய போலி
நபர்கள் காத்திருக்கிறார்கள்
content_copy
இஷ்டபட்(டு)ட
வாழ்க்கையை
அமைத்து கொண்டால்
கஷ்டங்களை வெளியில்
சொல்ல கூடாது
content_copy
விழுந்தாலும்
எழுந்து நிற்பவன்
ஒருநாள் வெற்றியின்
சின்னமாக மாறுவான்
📖 பக்கம் 23 / 606
arrow_back
arrow_forward
📋 Copied