புதிய முயற்சி தோல்வியடையலாம்
ஆனால் முயற்சிக்கவே இல்லையெனில்
வாழ்கை வெற்றி அடையாது

கையில் பணம்
இல்லையென்றால்
புத்தி சொல்லக்கூட உரிமை
இல்லாமல் போய்விடும்

எப்போதும் நம்பிக்கை
வையுங்கள் உங்கள்
தன்னம்பிக்கை மீது

நீ சொல்வதை கேட்க
ஒரு கூட்டம் உண்டென்றால்
நீ நல்லதை மட்டுமே
சொல்ல வேண்டிய
கட்டாயம் உனக்கு உண்டு

பொறாமை குணத்தை
போர்வையாய்
போர்த்தி கொள்ளாதே
அது உன் மகிழ்ச்சியை
மட்டுமின்றி உன்னையே
அழித்துவிடும்

விதியை நம்பிக்கொண்டு இருப்பவன்
என்றும் விழிக்க மாட்டான்
தன்நம்பிக்கையோடு இருப்பவன்
என்றும் தோற்க மாட்டான்

காலம் எதுவும் மாற்றாது
நாமதான்
காலத்துக்கு ஏற்ற
மாதிரி மாறிக்கனும்

நேர்மை உண்மை
இல்லாத போது
அன்பை மட்டும் வைத்து
எதையும் சாதித்து விடலாம்
என்று நினைத்து விடாதே

முயற்சிக்கு எதிரியாக
இருக்கும் ஒரே விஷயம் தான்
"நாளை"

கண்ணீரால் நனைந்த இதயம் தான்
அன்பை ஆழமாக உணரும்