சிலரது வாக்குறுதிகள்
தண்ணீரில் எழுதும்
எழுத்துக்களை போன்றதே

வாழ்க்கையில்
ஒரு நாள் எல்லாம் மாறும்
ஆனால் ஒரே நாளில்
எதுவுமே மாறாது
மனவுறுதியுடன்
வாழ்வில் பயணிப்போம்

சில கேள்விகளுக்கு
புன்னகை பதில்
என்றாலும் அந்த
புன்னகைக்குள் எத்தனை
ரணமென்று அவர்கள்
மனம் மட்டுமே அறியும்

போலி நண்பர்கள் உங்கள்
வலியின் ஆழத்தை ஒருபோதும்
புரிந்து கொள்ள மாட்டார்கள்

வானம் போன்ற பெரிய
இன்பங்கள் தேவையில்லை
விண்மீன் போன்ற குட்டி
குட்டி இன்பங்கள் போதும்
வாழ்க்கையை அழகாய் வாழ

நமக்கான
ஆறுதல் என்பது
நம்மிடம் தான் உள்ளது
மறந்து போவதும்
கடந்து செல்வதும்

மனைவியை
தாயை போல
பார்த்து கொள்ளும்
ஆணும்
கணவனை
பிள்ளை போல
பார்த்து கொள்ளும்
மனைவியும்
தான் உண்மையான காதலர்கள்

அதிக உரிமை
எடுக்காதே
வெறுப்பாய்
வெறுக்கப்படுவாய்

வாழ்க்கை ஒரு கடல்
நீந்த தெரிந்தால் அழகு
அல்லாவிட்டால் பாடம்

அகந்தை முன்னே
சென்றால் அவமானம்
பின்தொடரும்
என்பதை மறவாதே