வாழ்க்கை என்னும் கப்பலை
சுமையாக மாற்றுவது
நம்மிடம் உள்ள எண்ணங்கள் தான்

உண்மையால் காயப்படுத்தி விடுங்கள்
ஆனால் பொய்யால்
திருப்திப்படுத்த நினைக்காதீர்கள்

நீ முன்னேறும்போது
சந்திக்கிற எதிர்ப்புகள்
உன் வெற்றியின்
உயரத்தை நிர்ணயிக்கும்

சில வார்த்தைகள்
பேசப்படாமலேயே
சோகமாகக் காயப்படுத்துகின்றன

நடந்து முடிந்ததை மாற்ற முடியாது
ஆனால் இனி நடப்பதை
மாற்றும் சக்தி
நம் கையில் இருக்கிறது

துன்பம் சொல்லப்படாத கவிதை
ஒருவனின் உள்ளத்தில் எழுதப்படுகிறது

தனிமை துரோகமில்லா
சிறந்த தோழன்
மௌனம் தண்டனையில்லா
சிறந்த பாதுகாப்பு

கடின உழைப்பிற்கு
பதிலளிக்கத் தவறாத
ஒரே வாக்குறுதி வெற்றி

முடிவுகளுக்கு
முக்கியத்துவம் அளிக்காமல்
முயற்ச்சிக்கு
முக்கியத்துவம் அளித்தால்
முழுமையான
வெற்றி நிச்சயம்
சிந்தித்து செயலாற்றுங்கள்

மலை ஓங்கி
உயர்ந்து காணப்படுகிறது
அதுபோலவே மனதில்
தோன்றும் எண்ணங்கள்
உயர்வானதாக
இருந்து விட்டால்
துன்பம் இல்லை