இல்லாத சில விஷயங்களை
நினைத்துக் கொண்டு
இருக்கின்ற பல விஷயங்களை
இழந்து விடுகிறோம்

வாய்ப்புகளை
தேடி அலையாதே
வாய்ப்புகளை உருவாக்கு

புகைவண்டி என்னதான்
வேகமாகச் சென்றாலும்
அதைவிட வேகமாக
பின்நோக்கியே
செல்கிறது மனது

நிம்மதியாக
வாழ வேண்டும்
என்று விரும்பினால்
எல்லாவற்றையும்
மன்னித்து வாழ
வேண்டும் என்று
கட்டாயம் இல்லை
சிலவற்றை மறந்தும்
நிம்மதியாக வாழலாம்

மகிழ்ச்சியை விட
மறதி தான் தேவைப்படுகிறது
நிம்மதியாக வாழ்வதற்கு

ஒருவரும் நம்மோடு
நிலைக்கமாட்டார்கள்
வாழ்க்கை முடியும் வரை
நம்மோடு இருக்கும்
ஒரே நபர் நாம்தான்

அறிவாளிகளுக்கு அறிவு
அதிகம் ஆனால்
முட்டாள்களுக்கு
அனுபவம் அதிகம்

வாழ்க்கையை நேசித்தால்
அது உன்னை நேசிக்கத் தொடங்கும்

வாழ்க்கையை
அடிக்கடித் திரும்பிப் பாருங்கள்
நாம் அடைந்த வலிகளும்
அதனைக் கடந்து வந்த
வழிகளும் நமக்கு
நம்பிக்கை ஊட்டும்

ஒரு விளக்கின் வெளிச்சம்
அதை சூழ்ந்திருக்கும்
இருளை மட்டுமே அழிக்க முடியும்
அதேபோல் உன் அறிவு
உன் வாழ்வின் இருளை நீக்கும்