நல்லுள்ளங்களிடம்
உங்கள் மூளையை
ஆன் செய்து வையுங்கள்
போலி உறவுகளிடம்
உங்கள் எண்ணங்களை
ஆப் செய்து விடுங்கள்

அனுபவங்கள்
அதிகமானால்
அமைதியாகி
விடுகிறது மனசு

நம்மை நாமே செதுக்கிக்
கொள்ள உளிகள்
தேவையில்லை பலர்
செய்யும் ஏளனமும்
சிலர் செய்யும்
துரோகமும் போதும்

ஞாபகங்கள்
அழிக்கபடுவதில்லை
மாறாக ஆழமாக
விதைக்கபடுகின்றன

தட்டிக்கொடுக்க நண்பன்
இருந்தால் வேதனை
கூட சாதனை ஆகும்

ஈரம் பட்ட மண்ணில்
விழும் கால் தடங்களை
விட காயம்பட்ட மனதில்
எழும் வடுக்கள்
வார்த்தையில் அடங்காது

என்னை நீ
புரிந்துக்கொள்வாய்
பிடித்தவர்கள் சொல்லும்
போது இதை மீறி எதயும்
கேட்க தோனாது

வருங்காலத்தைப் பற்றி
கவலைப் படாதீர்கள்
நிகழ்காலத்தில் நல்ல
விதமாக செயல்பட்டால்
வருங்காலம் தன்னால் மலரும்

நேற்றைய நினைவுகளையும்
நாளைய கனவுகளையும்
இன்றைய நொடிகளை
தீர்மானிப்பதில்லை
அன்பை பரப்பு
ஆதரவு கிடைக்கும்

உலகத்தில் யாரை நாம்
அதிகமாக நம்புகிறோமோ
அவர்களிடம் தான்
நாம் ஏமாந்து போகிறோம்