மற்றவர் மனதை
உடைக்கும்போது
நினையுங்கள்
நாளை நம் மனதையும்
உடைக்க இரு மடங்கு
வருவார்கள் என்று

பிறர் அடைந்த மகிழ்ச்சியை
வெறுப்பவன்
தன்னுடைய அமைதியை
இழந்துவிடுகிறான்

வெற்றி பெற
எதுவும் இலக்காகாத போது
நீங்கள் புதிய வழியை
உருவாக்குங்கள்

மறக்கவே முடியாத முகமும்
மறக்கத் துடிக்கின்ற முகமும்
ஒரே முகமாக
அமைந்து விடுவது தான்
வாழ்வின் பெருங்கொடுமை

தொடர்ந்து நடந்தால் மட்டுமே
இலக்கை அடைய முடியும்
நிற்பவன் இடத்திலேயே நிற்கிறான்

தடைகள் வந்து
செல்லும் வழியே
வெற்றியின் உண்மை பாதை

அழகான நினைவுகள்
இதயத்தில் இருக்கும் வரை
எந்த உறவுக்கும் பிரிவு
என்பதே இல்லை

உன்னால் முடியும்
என்று நம்பு
முயற்சிக்கும் அனைத்திலும்
வெற்றியே

சிரிப்பது ஒருவரின்
முகத்தை அழகாக்கும்
மனதை விடுதலை செய்யும்

புன்னகைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
அனைவரையும் வசீகரிக்கும்
ஆயுதம் அதுவே