நிம்மதி தேடாதே
அது உன் உள்ளத்தில்
அமைதியாக பதுங்கி இருக்கும்
நிம்மதி தேடாதே
அது உன் உள்ளத்தில்
அமைதியாக பதுங்கி இருக்கும்
வாழ்க்கையை மாற்ற விரும்பினால்
முதலில் மனதை மாற்றிக்கொள்
நம்பிக்கை உள்ள இடத்தில்
அதிர்ஷ்டம் மலர்ந்துவிடும்
ஒரு நாள் முடியாதது போல
தோன்றும் காரியம்
அடுத்த நாளில் சாதனையாக மாறும்
முயற்சி நின்றால்தான் தோல்வி
சில உணர்வுகள்
கண்ணீராகவே
வெளிவர வேண்டும்
வார்த்தைகள் போதாது
நினைத்தது ஒன்று
நடந்தது ஒன்று
பிடித்தது ஒன்று
கிடைத்தது ஒன்று
இதுதான் இங்கே
பலரது வாழ்க்கை
கோபத்தில்
விலகி இருந்தாலும்
தன்னால் நேசிக்கப்பட்ட
உறவின் மனதை
நோகடிக்காமல் நடந்து
கொள்ளும் உறவுகள்
கிடைப்பது
வாழ்வின் வரம்
எதிரியின் வெற்றியை
பாராட்டும் காலம்தான்
உங்கள் வளர்ச்சியின் ஆரம்பம்
ஒரு மென்மையான வார்த்தை
ஒரு கனிவான பார்வை
ஒரு அன்பான புன்னகை
ஆகியவற்றால் அதிசயங்களையும்
அற்புதங்களையும் நிகழ்த்திக்
காட்ட முடியும்
மற்றவர்கள் என்னை புறக்கணிப்பதாக
நினைக்கிறார்கள் ஆனால் உண்மையில்
அவர்கள் என்னை இழக்கிறார்கள்
என்பது அவர்களுக்குப் புரிவதில்லை