சோர்வடைந்தாலும்
ஒரு அடிக்கு
முன் சென்றால் தான்
மாற்றம் நிகழும்

சில வலிகள்
கண்ணீராகவும் வராது
நொறுங்கிய உள்ளமாகவே
பதிந்து போகும்

சந்தோஷத்திற்காக வாழ்க்கையில்
ஆயிரம் குறிக்கோள்களுடன்
இருக்கும் பலருக்கும்
தெரிவதில்லை
நிம்மதியும் சந்தோஷமும்
மிக எளிதான விஷயத்தில்
குடி இருப்பதை

வாழ்க்கை பேசாது
ஆனால் அது கற்றுக்கொடுக்கிறது

நேசிப்பதைவிட
சுகமானது
நேசிக்கப்படுவது

பிறர் குறை
தேடுவதை நிறுத்து
அவ்வழி
நின்றுப் பார்
அதன் வலி
என்னவென்று தெரியும்
நிறைகள் இருப்பது
தெரிய வரும்

நினைத்தது போல்
எல்லாம் நடந்தது
ஆனால் கனவுபோல்
எல்லாம் ஒருநொடியில்
நடந்து முடிந்துவிட்டது

விதி வரைந்த பாதையில்
விடை தெரியாத
விண்மீன்களாக
விரைந்து செல்லும்
வாழ்க்கைப் பயணம்

வாழ்வில் கஷ்டங்கள் வந்து போகும்
அதனையும் கடந்து
வாழ பழகு

சிலரின் விருப்பங்கள்
வெளிப்படையானவை
எளிதாக அனைவருக்கும்
தெரிந்துவிடும்
சிலரின் விருப்பங்கள்
மறைமுகமானவை
அவ்வளவு எளிதில்
யாருக்கும் தெரியாது