இருப்பதை தொலைப்பதும்
தொலைத்ததை நினைப்பதும்
நிம்மதியை தேடுவதும்
பலர் வாழ்வில்
வாடிக்கையானதே
இருப்பதை தொலைப்பதும்
தொலைத்ததை நினைப்பதும்
நிம்மதியை தேடுவதும்
பலர் வாழ்வில்
வாடிக்கையானதே
அக்கறையுடன் கேட்பதற்கு
பதில் சொல்வதே
அன்பின் வெளிப்பாடு
சோகத்தைக் கடந்து
வந்த பின் தான்
உண்மையான வலிமை பிறக்கிறது
நேசித்தலை விட
பிரிதலின் போது
உன் நினைவுகள்
இரட்டை சுமை
மனதின் அழுத்தம் குறைக்க
ஒருமுறை கடன்கொடு
உன் இதயத்தை
சிறிய வெற்றிகள் கூட
பெரிய போராட்டங்களுக்கு
வழிகாட்டும்
மனம் தளராதே கடைசி
சாவிதான் பெரும்பாலும்
கதவை திறக்கும்
கடந்த பாதை
வலிகள் தந்ததால்
செல்லும் பாதை
வழியாக மாறியது
எல்லா இடங்களிலும்
எல்லா நேரங்களிலும்
எல்லா விசயத்திலும்
அறிவாளித்தனமாகவே
சிந்திக்கனும் என்பது
ஆகச் சிறந்த அறிவீனம்
நமக்கு பிடித்த ஒன்றை
அடைந்தே தீரவேண்டும்
என்ற பிடிவாதத்தை
பிடிவாதமாக
பிடித்துக்கொள்வதில்
இருக்கிறது நமது தன்மானம்
கண்ணேட்டமே
இல்லாதவர்கள் தான்
சுவாரஸ்யமான வெற்றிகளை
காண்கிறார்கள்