ஒருபோதும் யாரையும்
சார்ந்து இருக்காதீர்கள்
ஏனென்றால்
அவர்கள் எப்போது
உங்களை விட்டு வெளியேறுவார்கள்
என்று உங்களுக்குத் தெரியாது

பிறர் வளர்வதை பார்த்து
சோகம் அடைந்தால்
உன் வளர்ச்சி நீயே தடுக்கிறாய்

எவ்வளவு
நெருங்கிய உறவாக
இருந்தாலும்
நம் பலவீனத்தை
மட்டும்
வெளிப்படுத்தவே கூடாது
நேரம் வந்தால்
அவர்களும் எதிரியாக
மாறக்கூடும்

சிரிப்பை இயல்பாக்கி
கொள்ளுங்கள் மனதில்
கவலை இருப்பினும்
அகம் போல முகமும்
அழகு பெறும்

அமைதியான நடைதான்
வாழ்க்கையின் மிக நீண்ட
பாதையை கடந்துசெல்லும்

முடிவே இல்லாத
ஒரு வார்த்தை
முயற்சி

எதிர்பாரா நேரத்தில்
வந்தவை
எதிர்பார்க்கும் போது
வருவதில்லை

தோல்வி
உன்னை துரத்தினால்
நீ வெற்றியை
நோக்கி ஓடு

மன கீறல்களுக்கு
மருந்து
உன் கிறுக்கல்கள்

கவனமுடன் படிப்படியாக
முன்னேறுபவன் தான்
வாழ்க்கையில் மிகப்பெரிய
வெற்றியை பெறுவான்