ஒருவன்
தன் நிலையிலிருந்து
உயர்ந்தால்
அவன் தன் உறவுகளை
மறந்து விடுகிறான்
அதே ஒருவன்
தன் நிலையில்
இருந்து வீழ்ந்தால்
அவனை அவனது
உறவுகள் மறந்து
விடுகின்றனர்

வான்வெளியில்
மாயம் நிகழ்ந்தது
மழை பெய்தது
மண் மலர்ந்தது
கார்மேகம் கண்ட
மயில் போல
என் மனம் மகிழ்ந்தது
(மழை)

ஒவ்வொரு சிறிய
மாற்றமும்
பெரிய வெற்றியின்
ஒரு பகுதியாகும்

கணங்களுக்குள் மாறும் உலகத்தில்
மாற்றத்தையே வாழ்வாக்கிக்கொள்

வாழ்க்கை எப்போதும்
சரியாக இருக்காது
ஆனால் அதை
நிம்மதியாக வாழ முடியும்

விழும் வேகத்தை விட
எழும் வேகம் அதிகமாய்
இருந்தால் தோற்கடிக்க அல்ல
உன்னை பார்க்கவே
உன் எதிரி பயப்படுவான்

இல்லை என்று
வாடவும் கூடாது
இருக்கிறது என்று
ஆடவும் கூடாது
அத்தனையும் மாற
ஒருநாள் போதும்

மற்றவருக்கு ஆறுதல்
சொல்லும் போது
இருக்கும் தைரியம்
தனக்கு தேவைப்படும்
போது இருப்பதில்லை

அன்பின் இலக்கணம்
வாழ்வின் அடிப்படையில்
உறுதியான நட்பு
அழிக்க முடியாத கோட்டை போல

ஒரு நாள் வாழ்ந்தாலும்
அர்த்தமுள்ளதாக வாழுங்கள்
வெற்றி மட்டுமல்ல
மனநிம்மதியும் முக்கியம்