காணாமல் போனவர்களை
தேடலாம்
அதில் சிறிதும் தவறு இல்லை
கண்டும் காணாமல்
போனவர்களை மட்டும்
உன் வாழ்க்கையில்
நீ தேடி விடாதே

நிலவின் பிரதிபலிப்பில்
குளிர் காய்கின்றன
இரவு நேர விண்மீன்கள்

தன்னம்பிக்கை
இல்லாத வாழ்க்கை
சுகர் இல்லாத காஃபி
மாதிரி தான்
என்ன தான்
வாசமா இருந்தாலும்
ருசியா இருக்காது

மௌனமாய் நீயுறங்க
என் விழிகளிலோ
பல கனவு

கோபம் தான்
ஒரு மனிதனின்
மிகப்பெரிய எதிரி
அதனை கட்டுப்படுத்த
தவறினால்
நம் வாழ்க்கையையே
புரட்டி போட்டு விடும்

பிரிவு என்பது
நிரந்தரமாகாது
இருவரிடமும்
உண்மையான அன்பும்
உறுதியான நம்பிக்கையும்
இருந்தால்

நினைத்திருக்கவில்லை
இறந்த காலத்தில்
இத்தனை ரம்மியம்
இருந்திருக்குமென்று
கடந்த நாட்களெல்லாம்
வெறும் நினைவுகளாய்
போய்விடுமென்றும்

பிறர் என்ன சொல்கிறார்கள்
என்று கவலைப்படாமல் வாழ்ந்தால்
உன் மனதிற்கு அமைதி கிடைக்கும்
அதுவே உண்மையான மகிழ்ச்சி

வெற்றிக்கு வழி தேடாதே
நீயே ஒரு வழியாக மாறு

நினைவுகள்
காற்றாக இருந்தாலும்
வாழ்க்கை அதை
மெதுவாக உணரவேண்டும்