சில நேரங்களில் வாழ்கையை
புயலாக சந்தித்தாலும்
உங்கள் நம்பிக்கை
பாறையாக
நிலைத்திருக்க வேண்டும்
வாழ்க்கையில்
ஒவ்வொரு விஷயமும்
அழகு தான்
அவற்றை ரசிக்க கூடிய
மனநிலையில் இருந்தாள்
வீழ்வது தவறில்லை
வீழ்ந்தே கிடப்பது தான் தவறு
பிறரின் ஒளிக்கே
பொறாமை கொள்பவன்
நிழலுக்குள்ளே முடங்கி வாழ்கிறான்
தூரத்து சொந்தம் என்பது போல
தூரத்து நண்பன் என்று
யாருமே இல்லை
ஏனெனில் நண்பனான பின்னர்
யாரும் தூரம் இல்லை
கனவு காண்பது எளிது
அதை சாதிப்பது
நம்பிக்கையுடன் மட்டுமே
பிடித்து போனதாய்
எல்லோரையும்
மனதினில் விதைக்காதீர்கள்
பின்னொரு நாளில் சிலர்
முட்களாகவும் குத்துவார்கள்
அகந்தை முன்னே
சென்றால் அவமானம்
பின்தொடரும்
என்பதை மறவாதே
அறியாமல் செய்த தவறை
மன்னிக்க தெரியாத
மனிதர்களிடம் அறிந்து
செய்த தவறுக்கு
மன்னிப்பை எதிர்பார்ப்பது
முட்டாள்தனம்
பிழைகளை உணர்ந்தால்தான்
முன்னேற்றம் முடியும்
📖 பக்கம் 177 / 606
📋 Copied