வழிகள் சிக்கலாக இருந்தால்தான்
வாழ்வின் அர்த்தம் புரியும்

இதயத்தில்
இருக்கட்டும் துடிப்பு
உன் மனதில்
இருக்கட்டும்
என் நினைப்பு

மதி கொண்டு முயற்சித்தால்
விதி என்று ஏதுமில்லை இங்கு

வியர்வை சிந்தாமல்
கிடைக்கும் வெற்றி
மணம் இல்லாத பூ போல

ஏமாற்றம்
வலியை தந்தாலும்
நல்வழியையும் காட்டும்
வாழ்க்கைக்கு

வலியைப் பகிர்ந்தால் குறையும்
ஆனால் சிலர் அதையும்
பயன்படுத்திக்கொள்வார்கள்

என்னை
பிடிக்க முடியாது
என்று சிரித்துகொண்டே
ஓடும் குழந்தையின்
அழகு ஓர் அபூர்வம்

தாயின் கண்களில்
நம்பிக்கை இருக்கும் வரை
நீ தோற்க மாட்டாய்

உன்னைத் தவிர நீ
வெற்றியடைவதை
வேறு யவராலும்
தடுக்க முடியாது

நம் வாழ்வின் ஒவ்வொரு
நிகழ்வும் நமக்கானவையே
அதை நாம் புரிந்து
கொள்ளும் விதத்தில் தான்
சரியா தவறா என முடிவாகிறது