சிரிப்பின் பின்னால்
மறைந்த வலியை
யாரும் காண்பதில்லை
சிரிப்பின் பின்னால்
மறைந்த வலியை
யாரும் காண்பதில்லை
முடிந்தால் முயற்சி செய்
முடியவில்லை என்றால்
அதற்கு மேலும் முயற்சி செய்
வாழ்க்கை கடினம் அல்ல
அதை சிக்கலாக்குவது
நம்முடைய எண்ணங்கள்தான்
நமக்கானது என்று
படைக்கப்பட்டுந்தால்
தள்ளி போகுமே தவிர
கிடைக்காமல் போகாது
அன்பும் ஒரு நாள் தோற்று போகும்
உண்மை இல்லாதவரை நேசித்தால்
வெற்றிக்காக பயப்படாமல் உழைத்தால்
தோல்விக்காக கவலைப்பட வேண்டியதில்லை
நம்மிடம் இருக்கும்
சிறந்த உடை "நம்பிக்கை"
அதை அணிந்திருந்தால்
எந்தப் பாதையும் கடக்கலாம்
வானத்தில் இருந்து வரும்
மழைத்துளி மண்ணை
நனைக்க முன் பல
விவசாயிகளின் மனதை
நனைத்து விடுகின்றது
பிறர் என்ன நினைக்கிறார்கள்
என்பதில் கவலைப்படாமல்
நீ செயல் பட்டால்
உன் வெற்றி அவர்களை
ஆச்சரியப்படுத்தும்
நம்பிக்கை என்னும் தீப்பெட்டியால்
சாதனை எனும் விளக்கை ஏற்றுவோம்