பிடிக்கவில்லையா விட்டுவிலகிவிடு
கூடயிருந்து குழிபறிக்காம

வாழ்வின் பாதை
சிக்கலாக இருந்தாலும்
பயணம் தான்
நமக்கு அர்த்தம் தரும்

எல்லா போராட்டங்களும்
நம்மை வலிமையாக ஆக்கின்றன

விளையாட பொம்மை
வாங்கித் தரும் அப்பாவை விட
விளையாட தானே
பொம்மையாக மாறும்
அப்பாவை தான்
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கிறது

சொல்ல முடியாத
சோகங்களும்
நினைவுகளும்
ஒவ்வொருவர்
மனதிலும் உண்டு
யாரும் மறந்து வாழவில்லை
மறைத்து தான் வாழ்கிறோம்

வாழ்வில் நீங்கள்
சந்திக்கும் ஒவ்வொரு துன்பமும்
உங்களை ஒரு படி
மேலே ஏற்றிடவே வருகின்றன
மனம் தளராதீர்கள்

இயற்கையோடு இணைந்து
போகும் போது
மனம் நிறைந்த
அமைதி கிடைக்கும்

முன்னேற்றம் என்பது
சிறிதளவாயினும் தினமும்
இருக்க வேண்டும்

தொலைந்ததற்காக அல்ல
மீண்டும் பெற
முடியாததற்காக தான்
சோகமடைகிறோம்

அதிகபடியான
வேண்டுதல்
என்னயிருக்க போகிறது
நமக்கொரு
நல்வழியை காட்டு
என்பதை தவிர