ஒரு நிலவில்
இருண்ட பக்கமும் இருக்கும்
அதுபோல வாழ்க்கையிலும்
ஒளியுடன் நிழலும் இருக்கும்

தன்னை மேம்படுத்துவதே
உண்மையான போட்டி

தயக்கம் மிகப்பெரிய
தடை அது எத்தனை
திறமையையும் தன்
சிறிய நூலில் கட்டிவிடும்

கண்ணீர் புன்னகையின் பின்னால்
மறைந்து கொண்டே
இருக்கும் உண்மை

ஏற்றுக் கொள்ளும்
மனப்பக்குவம் வந்து
விட்டால் பிறகு என்ன
நடந்தாலும் கவலை
என்பது இல்லை

அடுத்தவர் விரும்பியபடி
தான் பேச வேண்டுமானால்
பொய் தான் பேச வேண்டும்

உண்மையான
உணர்வுகளோடு
ஒருவரை நேசித்தால்
தவறான எண்ணங்கள்
வாய் வார்த்தையாக கூட
வெளிவராது

நம் நினைவுகள் தான்
வாழ்க்கையின் நிழல்
எதை பார்த்தால் தெரியும்
எதை உணர்ந்தால் வாழலாம்

சில நேரம் அமைதியே
வாழ்க்கையின்
மிகப்பெரிய பதில்

அவர்களெல்லாம்
அப்படி கிடையாது என
நினைக்க வைக்கும் சிலர்தான்
அப்படியாகவே இருக்கிறார்கள்