இந்த உலகில் நிரந்தரமானவர்
என்று எவறும் கிடையாது
நிரந்தரமானது இயற்கையும்
இயற்கையின்
நிகழ்வுகளும் மட்டுமே

நேர்மை என்பது
பேச்சு மட்டுமல்ல செயல்
கண்ணியம் என்பது
தோற்றம் மட்டுமல்ல நடத்தை
கருணை என்பது
உதவி மட்டும் அல்ல அன்பு
நாம் அனைவரிடமும்
நேர்மையாகவும்
கண்ணியமாகவும்
கருணையோடும்
இருக்க முயற்சி செய்வோம்

தனிமை என்பது
அமைதி அல்ல
அது ஏக்கம் கத்தும் இடம்

ஒவ்வொரு நாளும்
வெற்றி பயணத்தை
தொடங்கிவிட்டேன் என்று
முதலடி எடுத்து வை

இயற்கை அளிக்கும்
ஒவ்வொரு அசைவிலும்
வாழ்வின் அமைதியை
உணர முடிகிறது

பேசிக்கொண்டே இருக்காதிர்கள்
வெகுசீக்கரமே வெறுக்கப்படுகிறார்கள்
மெளனமாக காத்திருங்கள்
அதிகமாக தேடப்படுகிறார்கள்

உறுதி குலைந்தவனுக்கு
ஒரு படையே இருந்தும்
பயனில்லை உறுதி
கொண்டவனுக்கு கையில்
ஒரு வாளே போதுமானது

ஆறுதல் தேடுவதை
விட அழுது விட்டு
போவதே மேல்

இனிமையான சொற்கள் எல்லாம்
உண்மையான வாழ்க்கையைத் தெரிவிக்காது

ஒருவரை
புரிந்து கொள்ள
சில காலம் தேவைதான்
ஆயுளும் தேவையென்றால்
பிரிவே சிறந்தது