தன்னம்பிக்கை தான்
நம் வாழ்விற்கான வெற்றி
பிறர் கை எதிர்பார்த்து
நம் வாழ்க்கையை
வாழ எண்ணினால்
நமக்கான வாழ்வு
அங்கே பறிபோகும்
குறையோ நிறையோ
நமக்கான வாழ்வை
நாமே தீர்மானிப்போம்

மௌனம் பேசும்போது
மனசுக்குள் ஒரு புயல் அடிக்கிறது

தொலை தூரத்தில்
இருந்தாலும்
நமது நினைவுகளை
தொலைக்காமல் இருப்பவர்களே
உண்மையான உறவுகள்

முயற்சிக்கத் தொடங்கும் தருணமே
வெற்றியின் கதவை
திறக்கும் திறவுகோல்

மாறும் உலகிற்கு
மாற்றங்கள்
தேவை தான்
மனதிற்கு அல்ல

நம்பிக்கை மட்டுமே
அனைத்து நோய்களுக்கும்
மலிவான தீர்வு

ஒரு போலியான
உறவை நேசித்து
நாமே நம் மனதை
காயபடுத்தி கொள்வதை
விட தனிமை மேலானது

நிகழ்காலத்தை நினைத்து
பெறுமையும் கொள்ளாதே
சிறுமையும் கொள்ளாதே

மாறாதவர்கள் வாழ்க்கையை
முன்னேற்ற முடியாது

கலப்படம் இல்லாத
புன்னகை
குழந்தைகளிடம் மட்டுமே