விடை தெரியாத
வாழ்க்கையில்
வரும் வினாக்களுக்கு
விடை தேடியே
அலுத்துப் போகிறது
விடை தெரியாத
வாழ்க்கையில்
வரும் வினாக்களுக்கு
விடை தேடியே
அலுத்துப் போகிறது
தோல்வியை பாடமாக்கி
முன்னேறும் மனதிற்கு மட்டுமே
வெற்றி நிச்சயம்
சோகத்தை மறைக்க சிரித்தாலும்
மனம் மட்டும்
உண்மையை மறக்காது
அருகில் இருப்பதால்
அன்பு அதிகரிப்பதும் இல்லை
தொலைவில் இருப்பதால்
அன்பு குறைவதுமில்லை
ஒவ்வொரு விடியலும் ஒரு வாய்ப்பு
அதை உணர்ந்தாலே
வாழ்க்கை சுவாரஸ்யமாகிறது
தன்னால் முடியும் என்ற
நம்பிக்கை உள்ள மனிதன்
தன் முயற்சியை
நாடுவான் அடுத்தவர்
உதவியை நாடுவதில்லை
அடுத்தவர் விருப்பத்திற்கு
ஏற்ப வாழ வேண்டும்
எனில் செத்து விடு
சில சமயங்களில்
இழப்புதான் பெரிய
ஆதாயமாக இருக்கும்
உன் கனவுகளை முடிக்க முடியாது
என்று சொல்வோர்
அவர்கள் தங்கள்
முயற்சியில் தோற்றவர்கள்
துன்பத்தை தவிர்க்க முடியாது
ஆனால் அதை
எப்படிச் சந்திப்பது
என்பதே வாழ்க்கை