பயத்தின் முடிவு வாழ்க்கையின் ஆரம்பம்

எல்லா இடங்களிலும்
எல்லா நேரங்களிலும்
எல்லா விசயத்திலும்
அறிவாளித்தனமாகவே
சிந்திக்கனும் என்பது
ஆகச் சிறந்த அறிவீனம்

உன் எல்லை எதுவென்று
உன் மனதுக்கு தெரியும் போது
அடுத்தவர்களின் விமர்சனத்தைபற்றிய
கவலை உனக்கெதெற்கு

தோல்வி வந்தால் ஓடாதே
காரணம் தேடிச் செல்

பார்வையை மாற்றினால்
வாழ்க்கையும்
புதிதாகத் தெரியும்

உண்மையாக இருப்பவர்கள்
கொஞ்சம் திமிரோடு
தான் இருப்பார்கள்

மனம் விட்டு பேச துணை
இல்லாத போது தான்
தெரிகிறது தனிமை எவ்வளவு
கொடுமையானது என்று

குறை கூறும் பலருக்கு
உத்தமனாய் இருப்பதைவிட
உன்னை நம்பும் சிலருக்கு
உண்மையாய் இரு

பிடித்தவை சலிப்பாகிறது
சலிப்பு பெரும்
வெறுப்பாகிறது
வெறுப்பு கோபம்
அடைய செய்கிறது
கோபம் பிறரை
கண்டபடி சாடுகிறது

ஊதி விடப்பட்ட பலூன்
உயரத்தில் தான் பறக்கும்
உதறித்தள்ளப்பட்ட நீயும்
உயரத்தில் பற