வாழ்க்கையில்
உயர்வு பெற
கடின உழைப்புடன்
தொடர்ச்சியான பயிற்சியும்
அவசியம்

உலகம் உன்னை முன்னேற வைக்கும்
நீ தான் அதை அடைவதை
முடிவு செய்ய வேண்டும்

நேரமின்மை என்பது
நாகரீகமான புறகணிப்பு

உழைப்பை நேசி
அதுவே உன்
கனவுகளை நனவாக்கும்

தனக்கென பாராமல் பிறரை
மகிழ்விப்பது இயற்கை தான்
செயற்கைக்காக அதனை அழிப்பது
மனிதன் செய்யும் பாவம்

பழகிய இருவரை
அன்பால் இணைத்தால்
அது அன்பின் வெற்றி
ஆக முடியாது
இருவரும் மனதால்
புரிந்து இறுதி வரை இணைந்து
அந்த உறவை தக்க வைத்துக்கொள்ளவதே
அன்பின் வெற்றியாகும்

விட்டுவிடாதீர்கள்
ஆரம்பம் எப்போதும்
கடினமானது

ஒரு தோழனிடம் உணரும்
தாயின் அன்பு
ஒரு தோழிக்கு
விலை மதிக்க
முடியாத பொக்கிஷம்

உன் உயர்ந்த
எண்ணம் என்னும்
அழகும் திறமையும்
இருக்கும் வரை
யாருடைய விமர்சனமும்
உன்னை ஒன்றும் செய்யாது

வாய்ப்புகள் நம்மை
கடந்து சென்றாலும்
தொடர்ந்து முயற்சியுடன்
பின் தொடர்ந்தால்
திரும்பி பார்க்கும்
நாம் விரும்பிய படியே
(நம்பிக்கையுடன்)