நீள்கிறது இரவு
நீங்காவுன் நினைவில்

நம் சிந்தனை
மாற்றத்தை நோக்கி
இருந்து நம் செயல்
முயற்சியை நோக்கி
இருந்தால் காலம்
வெற்றியை பரிசளிக்கும்

தவறு செய்ய
வாய்ப்பு கிடைத்தவன்
கெட்டவன் வாய்ப்பு
கிடைக்காதவன் நல்லவன்

சிரிப்பின் பின்னால் மறைந்திருக்கும்
கண்ணீரை யாரும்
கவனிக்க மாட்டார்கள்

மௌனம் தான்
பல சோகங்களின்
மொழிபெயர்ப்பு

உன்னை
நீ புரிந்துகொள்ளவும்
தெளிவு கொள்ளவும்
பயணம்
ஒரு அற்புதமான வழி

சிரிப்பு ஒரு மருந்து அல்ல
ஆனால் வாழ்வின்
மிகச் சிறந்த பாதுகாப்பு

தனியாக போராடுகிறேன்
வெற்றி கிடைக்குமா
என்று வருந்தாதே
நீ தனியாக போராடுவதே
வெற்றி தான்

மறுக்கப்படும் வாய்ப்புகள்
மறுபடியும் வரவில்லை
என நினைக்காதே
நீ தயார் ஆனபின் தான்
அது திரும்பும்

உண்மையான வாழ்க்கை
நாம் பெறுவதில் இல்லை
நாம் பகிர்வதில் தான்