உனது கவலைகளை
ஒரு போதும் மற்றவர்களின்
அனுதாபத்திற்காக
பயன்படுத்தாதே

பணத்தை மட்டும் சேர்க்காமல்
நண்பர்களையும் சேர் வாழ்வில்
மகிழ்ச்சி வேண்டுமென்றால்

அழுகின்ற வினாடியும்
சிரிக்கின்ற நிமிடங்களும்
வாழ்க்கை சக்கரத்தில்
நிரந்தரமில்லை

சோகத்தின் ஆழம்
சிரிப்பில் மறைக்கப்படும்

வாழ்க்கை உன்னை
எத்தனை முறை கீழே தள்ளினாலும்
மீண்டும் எழுவதற்கான பலம்
உன்னிடம் இருக்கவேண்டும்

பதிலை மட்டுமே தேடி தேடி
கேள்வியை மறந்து விடாதீர்கள்

ஏமாற்றம்
வலியை தந்தாலும்
நல்வழியையும் காட்டும்
வாழ்க்கைக்கு

வெற்றி அடைய
நினைப்பவர்கள் இருவர்
ஒருவர் அதற்காக உழைப்பவர்
மற்றொருவர் அதற்காக பொறாமைப்படுவோர்

சூழ்நிலை எதுவாயினும்
உன்னை நம்பி வந்தவரை
ஒரு நாளும் ஏமாற்றாதே

உடைந்த கண்ணாடி
பல பிம்பங்களை காட்டும்
பிரிந்த நட்பு
பல முகங்களை காட்டும்