முன்னேற விரும்பினால்
முன்னேற்றம் செய்ய
தயாராக இரு

நாம் நிராகரிக்க படும்
இடத்தில்
அல்லது
நம் மீது நம்பிக்கையின்றி
பழகும் வட்டத்தில்
இருந்து
விலகிச் சென்று விடுங்கள்
நமது அருமையை
காலம் ஒருநாள்
எடுத்துக்காட்டும்

எதிரியை எதிரே வை
துரோகியை தூர வை
உண்மையான விஸ்வாசம்
கொண்டவர்களை மட்டும்
இதயத்தில் வை

நம்பிக்கை என்னும் ரதத்தில்
பயணித்து கொண்டு
இருப்பவர்களுக்கு
வெற்றியின் இலக்கு
தூரம் இல்லை

சில நேரங்களில்
யாரிடமும் எதுவும்
சொல்லாமல் தனிமையில்
இருப்பதே மேல்

சவால்களை தாண்டி
புன்னகையோடு நிற்பதே
உண்மையான வெற்றி

ஒருவனின் தெளிவான
குறிக்கோளே
வெற்றியின்
முதல் ஆரம்பம்

நிலையில்லா
நீர்குமிழியல்ல நட்பு
அதன் உள்ளிருக்கும்
நிரந்தரமான காற்று

காமம்
ஒரு தீவிர உணர்வு
அதை நன்கு
புரிந்து கொண்டு
வாழ்க்கையின்
அழுத்தங்களை சமாளிக்க
நாம் அதை எவ்வாறு
பயன்படுத்துகிறோம்
என்பது முக்கியம்

மௌனம் மட்டுமல்ல
சில நேரங்களில்
தோல்விகளையும்
நேசிக்க அல்லது ஏற்றுக்கொள்ள
கற்றுக் கொண்டால்
வெற்றி நம்மை எந்நேரமும்
பற்றிக் கொள்ளும்