சத்தமின்றி இதயத்தை
துளைக்கும்
உன் மௌனத்தை
விடவா
ஒரு கூர்மையான
ஆயுதம் இவ்வுலகில்
இருக்கப்போகிறது

உன் விழியில்
கற்று கொண்டதை
என் விழியால்
கடத்துகிறேன்
மீட்டு கொள்
விழிகளால் மீண்டும்
நான் கற்று கொள்ள
உன் விழி கவிதைகளை

உறங்காத கண்களையும்
தழுவி கொண்டது
உறக்கம்
உன்னன்பின் தாலாட்டில்

நீ மறைத்தாலும்
மணம் வீசும்
மலராய்
உன் கண்களும்
காட்டி கொடுக்குது
என்மீதுள்ள
உன் காதலை

நீ பேசும் போது
என் மனம் காதலிக்கிறது
நீ அணைக்கும்போது
என் ஆன்மா முழுவதுமாக
உன்னுடையதாகிறது

என்னிடம் பேச
காத்திருக்கிறாய் நீ
உன்னிடம்
என்ன பேச வேண்டும்
என்று யோசித்து கொண்டே
இருக்கிறேன் நான்
நமக்காக காத்திருக்கிறது காலம்
நாம் இருவரும் பேச போகும்
அந்த அழகிய தருணங்களுக்காக

வெறும் நட்பில்
ஆரம்பமான நடனம்
தீண்டலாக மாறிய
ஓசையில்லாத இசை

காயங்களும்
மாயமாகும்
என்னருகில்
நீயிருந்தால்

மௌனமாக தட்டும்
விரல்களில் கூட
ஆசையின் கவிதை எழுந்தது

பேசாமல் உறவாடும்
கண்ணோட்டங்கள்
ரொமான்ஸ் என்பதற்கே அகராதி