உன்னை தொட்ட
காற்று
எனை தீண்டியதோ
மனம் சில்லென்று
குளிர்கிறதே
உன்னை தொட்ட
காற்று
எனை தீண்டியதோ
மனம் சில்லென்று
குளிர்கிறதே
அன்பு எதையும்
வெல்லும் என்பதை
நிரூபிக்கும்
சோதனையே தூரம்
என்னை நீ
நினைக்க
மறந்தாலும்
உன் நினைவுகள்
கலந்தேயிருக்கும்
என் மூச்சிக்காற்றோடு
காணாத போதும்
கண்முன்னே
நடமாடும்
என் விழிகளின்
ஜீவன் நீ
காதல் கற்றுத்தந்த நீ
தனிமை கற்று தந்தாய்
கணவனிடம் எதையும்
மறைக்காத மனைவிக்கும்
மனைவியை யாரிடமும்
விட்டு கொடுக்காத
கணவனுக்கும்
பிரிவு என்பது இல்லை
வார்த்தைகளை கவர்ந்திழுக்கும் முத்தம்
ஆசையின் முழு மொழிபெயர்ப்பு
காதல் ஒரு இசை போல
மனம் அதற்கேற்ப ஒலிக்க தெரிந்தால்
வாழ்வு மெலோடியாகும்
மூங்கில் துளைகளும்
அறியும்
என் மூச்சி காற்றிலும்
நீதானென்று
அந்த ராதையின்
கண்ணனாய்
நீ என்னை தொடும்போது
என் மனதோடு
என் ஆன்மாவும்
துள்ளித் திரிந்துவிடுகிறது