கண்களில் தொடங்கி
கட்டிலறையில்
முடிவதல்ல காதல்
மனதில் மலர்ந்து
மணவறை சென்று
மரணம்வரை
உடனிருப்பதே
உண்மை காதல்

நெஞ்சின் துடிப்பை
வேகப்படுத்தும் ஒரு தீப்பொறி
உன் தொடுதலில் மறைந்திருக்கும்

காற்றோடு
கலந்து வரும்
உன் நினைவுச்சாரலில்
நனைகின்றேன்
நானும்

உன் தரிசனத்துக்காகவே
விரைந்தோடுது மனம்

காற்றோடு
நான் கலக்கிறேன்
உன் சுவாசக்காற்று
என்னை தீண்டுவதற்கு
நான் உன்னை
நேசிப்பதனால் மட்டுமல்ல
உன்னையே மூச்சுக்காற்றாக
சுவாசிப்பதனால்

மொத்த எதிர்பார்ப்பும்
நீயென்ற ஒன்றே
உன் வழி
நோக்கும்
இந்த விழிகளுக்கும்

ஒரு கணத்துக்கு கூட
பிரிய மனது இல்லாதபோது
அதுதான் ஆழமான காதல்

கண்ணோட்டம் ஒரு கவிதை
அதை புரிந்தவன் தான்
உண்மையான காதலன்

ஒரு மரத்தில்
பல இலை
கிளைகளாய்
நீ என்பதில்
எத்தனை எத்தனை
நினைவு
அழகாய் மனதில்

காதல் ஒரு மழை போல
நனைந்த பிறகே
அதன் அழகை உணர முடியும்