ஒரு மெல்லிய நெருக்கம்
சத்தமில்லா பூகம்பம் போல
மனதில் பரவி விடும்

நினைவுகளால் மனது கனிந்து
முத்தத்தால் உயிர் உண்ணிக்கொள்ளும்

காற்றைத் தொட முடியாது
ஆனால் உன்னால்
என்னைத் தொட முடியும் என்ற
உணர்வு அழகானது

இருளில் கூட
அவள் நினைவு மட்டும் போதும்
ஒரு தீப்பொறி போன்ற
மின்சாரத் தீண்டல்

கண்ணோட்டம்தான் பழகியது
ஆனா மனசு ஏற்கனவே
உயிரோட பழகிடுச்சு

நினைவுகளும் சுமை
மனதுக்கு
தொல்லையாகும் போது

சுவாசிக்கும்போதும்
அவளின் வாசனை
வந்து சேரும்போது தான்
காதல் கனிந்திருக்கும் என்று தெரியும்

விடைபெறும்
போதெல்லாம்
பரிசாக்கி
செல்கின்றாய்
அழகிய
தருணங்களை...

நீள வேண்டும்
இந்நொடிகள்
நினைத்து நினைத்து
ரசித்திட
நம் நிமிடங்களை

பூக்கள் உதிர்ந்த பின் கூட
அதன் மணம் மாறாதது போல
சில காதல்கள் என்றும் வாடாது