கண்ணீர் வரும் காரணமே
சில நேரம் இனிமையாக இருக்கும்
விரைவான மூச்சில் கூட
ஆசையின் தீ பாய்ந்து
கனவுகளை எரியவைக்கிறது
காதல் ஒரு மழைதுளி அல்ல
அது முழு பருவம்
காதல் ஒரு வார்த்தை இல்லை
அது மூச்சில் கலந்த
மௌன உரையாடல்
நீ என் வாழ்வின்
பாதியில் அதிசயம்
மீதியில் ரகசியம்
நம் உலகத்தில்
உன்னென்
நிழலை தவிர
வேறதெற்கும்
இடமில்லை
வார்த்தை இல்லாமல்
பேசும் கண்கள்
காதலின் உண்மை மொழி
காதல் பிடிக்குள்
சிக்கி காற்றும்
திணறுகிறது
கொஞ்சம் இடைவெளிவிடு
பிழைத்துப்போகட்டும்...
கோர்த்த ஆசைகள்
மனதில்
உதிரா மல்லிகையாய்
உன்னோடு
சூடி கொள்ள
உதட்டின் அருகே
நெருங்கும் சுவாசம்
காதலின் குளிரை
ஆசையின் சூடாக மாற்றுகிறது
💖 பக்கம் 454 / 478
📋 Copied