அமைதியாக இணையும் கரங்கள்
இரு உயிர்களையும்
ஒன்றாய் கட்டிவிடுகின்றன
நினைவுகளால் நெய்யப்பட்ட பாசம்
இருளின் நடுவிலும்
ஒரு விளக்காக வழி காட்டும்
தொட்டாலே மனம் உருகும்
அவளின் மென்மை அதற்குக் காரணம்
மூச்சின் நிறைவை விட
காதலின் நெருக்கம் தான்
உயிரோட்டமாக இருக்கும்
இதழ்களின் மௌனம் கூட
இருவிழிகளில் பேசும்
காதலை அடக்க முடியாது
பார்வை மட்டும் போதாது
பார்வைக்குள்ளே புலப்படும்
உணர்ச்சியே ரொமான்ஸ்
நீ என்னவன் என்பதில்
எப்போதும் எனக்கு
திமிர் அதிகம் தான்
தூரம் இருந்தாலும்
உணர்வு இணைந்தால்
காதல் நீடிக்கும்
உன் நினைவுகள்
எனக்கு இனிமையான
துன்பத்தை தருகிறது
இதயம் இருப்பதோ
என்னிடத்தில் தான்
ஆனால் எப்போதும்
நினைப்பதோ உன்னை
பற்றி மட்டுமே
💖 பக்கம் 446 / 478
📋 Copied