என் வாழ்க்கையில் உன்
காதலை இழந்துட்டு ஒரு
பொம்மை போல் வாழ்ந்து
கொண்டு இருக்கிறேன்
மன கூண்டில்
நீ சிறை
கைதியாய்
நான் உனை
காணும் ஆவலில்
நீ தூரமாக இருந்தாலும்
உனது குரலை கேட்காத
நொடிகள் இல்லை
கேட்கிறேன் இதய துடிப்பில்
ஏனென்றால் என் இதயம்
துடிப்பது உனக்காக அல்லவா
மின்னல் கீற்றாய்
இதயத்தை தாக்கி
புயலாய் மனம் புகுந்து
திமிராய் குடிக்கொண்டாய்
என் இதயம் பறித்தாய்
கல்நெஞ்சக்காரா
வாழ்க்கை படகில்
நீண்ட தூரம்
பயணிக்க வேண்டும்
அதுவும், எனக்கு பிடித்த
உன்னுடன் மட்டுமே
எங்கிருந்தோ
எனை உயிர்பித்துக்
கொண்டிருக்கிறாய்
உயிர் வேராய்
தொடர்ந்துச்செல்லும் நினைவுகள்
காதல் உண்மையானது
என்பதை நிரூபிக்கும்
சில நேரம்
கொன்று செல்கிறாய்
பல நேரம்
கொண்டு செல்கிறாய்
மனதை
இம்சையான இன்பம்
உன் அமைதி
ஆழ் மனதுவரை
பேரிரைச்சலாய்
ஏதேதோ பேசி
கொல்கிறது
நீ மெதுவாக
என் பெயரை
அழைக்கும் போது
அந்த இரண்டு எழுத்துக்கே
உயிர் வந்துவிடுகிறது
💖 பக்கம் 440 / 478
📋 Copied