நீ என்னை தொடும்போது
என் உடல் பூகம்பம் அடையும்
ஆனால் என் மனம் அமைதியாகி விடுகிறது
இரவு நேரங்கள் கூட
உன்னைவிட
நெருக்கமாகத் தெரியவில்லை
நீ என்னை புரிந்து கொள்வது
நான் என்னையே
புரிந்து கொள்வதற்கு உதவுகிறது
முகத்தில் இல்லாத புன்னகை
மனதின் உள்மூச்சில் மட்டும்
பிரதிபலிக்கிறது
நீ என்னை நேசிக்கிறாய்
என்ற உணர்வு போதுமானது
வாழ்க்கையின் போராட்டங்கள்
எதுவாக இருந்தாலும்
தொடுதலின் வெப்பம்
உடலை மட்டுமல்ல
இரத்தத்தின் ஓட்டத்தையும் எரிக்கிறது
சற்றே
இமை மூடிக்கொள்ளேன்
யோசித்து வைத்ததை
வாசிக்க வழியின்று
யாசிக்கிறது மனம்
என்னை நேசித்ததிலும் சரி
என்னை அதிகம் நேசிக்க
வைத்ததிலும் சரி உனக்கு
நிகர் யாரும் இல்லை
மறைக்க முடியாத ஆசை
இரவின் இருளில் கனவுகளுக்குள்
வெப்பமாக நுழைந்து
உயிரை கிளரச் செய்கிறது
தொலைவு
ஒன்றும் தூரமில்லை
உன் குரல்
செவியோடு
இருப்பதால்
💖 பக்கம் 437 / 478
📋 Copied