எனது வாழ்கை முழுதும்
உன் நினைவுகளால்
நிறைந்திருக்க வேண்டும்
உனக்கும் எனக்கும் மிஞ்சியிருப்பது
ஒன்றுதான் பேசாமல் நீயும்
பேசும் வரை நானும் காத்திருப்பது
என்னோடு நீ
கூட இருக்கும் நேரம்
தான் என் வாழ்வின்
வசந்த காலங்கள்
சில பார்வைகள்
கோடி வார்த்தைகளை விட
நெருக்கமானவை
மெல்ல மெல்ல
பறிபோகுது மனம்
நீயெனை கொள்ளையடித்த
தருணங்களில்
உதட்டின் அருகே
நிற்கும் தருணம்
நேரத்தை நிறுத்தும்
வலிமை கொண்டது
நீ ஒவ்வொரு முறையும்
பிரிந்து செல்லும் போது
தான் தெரிகிறது தூரங்கள்
நம் உறவை பிரிக்கவில்லை
இன்னும் ஆழமாக்குகிறது என்று
இரு இதயங்கள்
பேசும் நிமிஷம்
சொற்கள் வேலை
செய்யவே மாட்டாது
இதயத்தின் அடையாளம்
சொற்களில் இல்லை
அந்த உணர்வில் தான்
காதல் ஒரு சொல் அல்ல
அது இரு இதயங்களின்
அமைதியான உரையாடல்
💖 பக்கம் 422 / 478
📋 Copied