உதடுகள் சொல்வதல்ல
மௌனமே காமத்தின்
மொழி பேசுகிறது
மார்கழி குளிர்
என்னயும்
கோலம் போட
வைத்தது
என்னவன்(வள்) கன்னத்தில்
(மார்கழிக்கவிதை 😁)
காதல் வந்தால்
இரவும் பகலாகி
மனமும் சிறுவனாகிறது
நெருக்கத்தின் நொடிகளில்
உருகும் மனம்
ரொமான்ஸின் இசையில் திளைக்கிறது
உன்னுடைய அழகை விட
உன் அன்பின் சூரியகாந்தம்
எனை ஈர்க்கிறது
மல்லிகைக்குள் மறைந்திருந்து
மயக்கும் வாசனையாய்
மனதில் ஒளிந்திருந்து
மயக்குகிறாய் எனை
தவிக்கவிடும்
தனிமையும்
உணர்த்துகிறது
உன் நெருக்கத்தை...
பார்வையில் பதிந்த தேவை
சொற்களை மிஞ்சும்
வேகமாய் பரவுகிறது
புன்னகை ஒரு துளி தான்
ஆனாலும் உயிரின்
பாலைவனத்தில் மழையாகும்
நீயின்றி
நகர்ந்ததுண்டு
நாட்கள்
உன் நினைவின்றி
நகர்ந்ததில்லை
என் நாட்கள்
💖 பக்கம் 406 / 478
📋 Copied