கலைத்திட விரும்பாத
கனவொன்று கண்களில்
நிறைந்திருக்கு நீயாக
மறுமலர்ச்சியாய்
மலரும் நினைவுகள்...
மதி மயங்கியே
போகிறேன்...
மயக்கிய
வார்த்தைகளால்...
அன்றும்
இன்றும்
என்றும்
தெளிவடையாமல்...
அன்புக்கு அடிமையாய்...
விழி முன்னே
நீ வந்தால்
கண் இமைக்காமல்
ரசிக்கிறது மனம்
உன் நினைவு
சுவையில்
ஆறிப்போனது
தேனீரும்
வேட்டியில் கரையாய்
படிந்து விட்டாய்
மனதில் அழித்தாலும்
அழியாத அழகிய
காதல் கறையாய்
உயிரே
உதடுகள் தேடும் நிமிடம்
ஆசை தீயின் சுடராக மாறுகிறது
உன் கைகளை
பிடித்து நிற்கும் போது
காலம் கூட
தனக்கு நேரம் வேண்டாம்
என்று சொல்வதுபோல் உணர்கிறேன்
மௌனத்தின் உச்சியில்
தோன்றும் சிரிப்பே
உண்மையான காதல்
காற்றைத் தொட முடியாது
ஆனால் உணர முடியும்
உன் காதலும் அப்படித்தான்
என் உயிர் முழுவதும்
நிறைந்திருக்கிறது
உன்னிதயத்தை
யாரும் நேசிக்கட்டும்
ஆனால் என்னிடத்தை
பாதுகாப்பது
உன் பொறுப்பே
💖 பக்கம் 385 / 478
📋 Copied