நீ நிலவும் இல்லை
நட்சத்திரமும் இல்லை
இவைகளை எல்லாம்
அள்ளி சூடிக்கொள்ளும்
வானம் நீ!
நீ நிலவும் இல்லை
நட்சத்திரமும் இல்லை
இவைகளை எல்லாம்
அள்ளி சூடிக்கொள்ளும்
வானம் நீ!
காத்திருந்த காதலொன்று
இளமையாயிருக்கிறத
முதுமையிலும்
என்றென்றும் உயிர்த்துடிப்புடன்
வாடாமலும் உதிராமலும்
அன்புநீர் ஊற்றியது
நீயென்பதால்
நேரம் நிற்கும் அளவிற்கு
உன் கண்களின் ஆழத்தில்
நான் தொலைந்து போனேன்
உன்னால் மலர்ந்த காதல்
என் வாழ்வின் உச்சிமுடியாகிறது
இரவு நீள்ந்தாலும்
ஒரு பார்வை
ஆயிரம் கனவுகளை
உருவாக்குகிறது
நினைவுகளிலே கூட
அவளின் தோலை
எண்ணிச் சிலிர்க்கும் அந்த ஆசை
நீ நகர்ந்த
பின்பும்
எனை
நகர விடாமல்
கட்டி போடுகிறது
நாம் ரசித்த
நொடிகள்
மூடிய கண்களிலும்
காதலியின் முகம்
தெளிவாக தெரிந்தால்
அதுதான் உண்மையான காதல்
ஆபத்துக்களை
பற்றி கவலையில்லை
ஆட்கொள்ள நீயிருப்பதால்
நம் வாழ்க்கை பாதையில்